தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே (தித்திக்கும்)
எத்திக்கும் புகழ்க் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே குமரையா
இன்பம் ஏதுமில்லையே
அத்தரும் சவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகையா
அங்கம் மணக்கவில்லையே (அத்தரும்)
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப்போல
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா
சீர்மணம் வேறு இல்லையே
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற்பொருளாகவில்லையே - முருகையா
முதற்பொருளாகவில்லையே
சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப்பொருள் ஏதுமில்லையே - குமரையா
மெய்ப்பொருள் ஏதுமில்லையே
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகையா
எண்ணத்தில் ஆடவில்லையே (எண்ணற்ற)
மண்ணுக்குள் மகிமைபெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே (தித்திக்கும்)
Labels: தித்திக்கும் தேன் பாகும்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home