முருகா நீ வரவேண்டும் முருகா நான்
நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா நீ வரவேண்டும்

நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா (நினைத்த)

உனையே நினைந்தே உருகுகின்றேனே
உணர்ந்திரும் அடியார் உளம் உறைவோனே (நினைத்த)

கலியுக தெய்வமும் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போழ்தில்
மாயோன் மருகா முருகா
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)

தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே (தித்திக்கும்)

எத்திக்கும் புகழ்க் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே குமரையா
இன்பம் ஏதுமில்லையே

அத்தரும் சவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகையா
அங்கம் மணக்கவில்லையே (அத்தரும்)

சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப்போல
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா
சீர்மணம் வேறு இல்லையே

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற்பொருளாகவில்லையே - முருகையா
முதற்பொருளாகவில்லையே

சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப்பொருள் ஏதுமில்லையே - குமரையா
மெய்ப்பொருள் ஏதுமில்லையே

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகையா
எண்ணத்தில் ஆடவில்லையே (எண்ணற்ற)

மண்ணுக்குள் மகிமைபெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே (தித்திக்கும்)

Labels:

முருகா.. முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்தவேல் முருகா - கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடிகொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா - மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா (அழகென்று)

பிரணவப் பொருள் கண்டதிரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எங்கள்
கலியுக வரதனே அருள்தாரும் முருகா (அழகென்ற)

Labels: